கனடா- கலா பிரம்ம இசைக் கல்லூரியின் வெற்றிகரமான 20வது ஆண்டு நிறைவு விழா ஒரு ‘யூனியர்’ இசை விழாவாக இடம்பெற்றது
கனடா வாழ் பிரபல கர்நாடக மற்றும் மெல்லிசைப் பாடகராகவும் சிறந்த பயிற்றுவிப்பாளருமான திருமதி சுகல்யா கலைச்செல்வன் அவர்களைக் குருவாகவும் நிறுவனராகவும் கொண்டு இயங்கிவரும் கனடா- கலா பிரம்ம இசைக் கல்லூரியின் வெற்றிகரமான 20வது ஆண்டு நிறைவு விழா ஒரு ‘யூனியர்’ இசை விழாவாக கடந்த வாரம் இடம்பெற்றது.
23-08-2025 சனிக்கிழமையன்று கனடாவின் தோர்ன்ஹில் நகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த அழகிய இசை விழாவில் கனடா- கலா பிரம்ம இசைக் கல்லூரியின் அதன் மாணவ மாணவிகள் மேடையில் சமர்ப்பித்த அனைத்து இசை நிகழ்ச்சிகளும் ஒரு ‘குட்டி’ இசைவிழாவை நாம் அனைவரும் ரசித்தது போன்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.
மேற்படி கனடா- கலா பிரம்ம இசைக் கல்லூரியின் வெற்றிகரமான 20வது ஆண்டு நிறைவு விழா பிரபல வயலின் மற்றும் வீணை இசைக் கலைஞர் ரி. என். பாலமுரளி அவர்களும் சிறப்பு விருந்தினராக சங்கீத ஆசிரியை திருமதி குலநாயகி விவேகானந்தனும் கலந்து சிறப்பித்தனர்.
மெல்லிசைப் பாடகராகவும் சிறந்த பயிற்றுவிப்பாளருமான திருமதி சுகல்யா கலைச்செல்வன் அவர்களும் தனது ஆற்றலை வெளிக்காட்டும் வகையில் சிறந்த பக்கவாத்திய கலைஞர்களோடு இணைந்து தனியான இசைக் கச்சேரி’ ஒன்றையும் எமக்கு அளித்தது ஒரு ‘பேரின்பம்’ ஆகும்.
நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று அன்றைய கனடா- கலா பிரம்ம இசைக் கல்லூரியின் வெற்றிகரமான 20வது ஆண்டு நிறைவு விழா ஒரு இசைவிழா ரசிகர்களுக்கு தரும் இசையின்பத்தை தந்தது என்பதே விழாவிற்கு இசைவான விமர்சனம் என்பது உண்மை.!
Sathiyan