24 மணிநேர பொதுமக்கள் சேவை வடக்கில் மந்தகதி

Share

வடமாகாணத்தைப் பொறுத்தவரை ஆளுநர் பொதுமக்கள் சேவை வினைதிறனாக இல்லை என்பது பலரது கருத்தாக உள்ளது.

வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் சேவை ஒவ்வொரு புதன்கிழமையும் இடம் பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையிலும் பெரும்பாலான புதன்கிழமைகள் ஏதோ ஒரு காரணத்தை கூறி நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

பொது மக்கள் புதன்கிழமைகளில் சேவை இடம் பெறும் என ஆளுநர் செயலகத்துக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் இன்று சேவை இடம்பெறாது தொலைபேசி மூலம் அறிந்து விட்டு வாருங்கள் என திருப்பி அனுப்பப்படும் சம்பவங்கள் இடம் பெறுகிறது .

அது மட்டும் அல்லாது ஆளுநர் செயலக தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளும்போது ஆளுநரை சந்திப்பதற்கான திகதி நேரம் தருமாறு கேட்கப்பட்டாலும் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் அழைப்பு எடுக்கிறோம் என கூறியும் இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை என்பது பலருடைய குற்றச்சாட்டாக உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>