3 day International Research Conference, hosted by Federation of Global Tamils, in Canada was very successfull.

Share

அனைத்துலக தமிழர் பேரவை கனடா – ஸ்காபுறோவில் நடத்திய 3 நாள் ‘ சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கு’ சிறப்பாக இடம்பெற்றது

கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை, 11ம் திகதி சனிக்கிழமை மற்றும் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்கள், கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக தமிழர் பேரவை கனடா-ஸ்காபுறோவில் நடத்திய 3 நாள் ‘ சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கு’ சிறப்பாக இடம்பெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சிகளில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் இணை அமைச்சருமான விஜேய் தணிகாசலம் மற்றும் ரொறன்ரோ நகரசபை உறுப்பினர் நீதன் சண்முகராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து ஆற்றிய உரைகள் அங்குரார்ப்பண வைபவத்திற்கு சிகரம் வைத்தது போன்று அமைந்தது. அன்று கலந்து கொண்ட உ ரையாளர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் தங்கள் துறைசார்ந்த விடயங்களை முக்கிய பொருளாக எடுத்து உரையாற்றியமை சபையோரைக் கவர்ந்தவையாக அமைந்தன.

இங்கே காணப்படும் படங்கள் 10ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அங்குரார்ப்பண வைபவத்தின் போது எடுக்கப்பெற்றவையாகும். அன்றைய நிகழ்ச்சிகளை கென் கிருபா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>