31ம் நாள் நினைவஞ்சலியும். நன்றி நவிலலும் | திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்

Share

(சுருவில் ஐயனார்கோவிலடி யாழ்ப்பாணம்)

மாதம் ஒன்று ஆனாலும், மனமோ இன்னும் ஆறவில்லை
உனைக் காணும் தருணம் எல்லாம்,சிறகடிக்கும் என் இதயம்
இன்று உன் முகம் தேடி, மனம் வாடி
இரவெல்லாம் ஏக்கப் பெருமூச்சுகளில் எசமானனாயிற்று
என் உயிர் அணுக்களில் கானமாய் கவந்திட்ட உனை
தானமாய் எமனிற்கு வார்த்திட்ட பாவி ஆனேன்
கண்களில் காந்தத்தையும், கவிதை ஊற்றையும் கலந்து கனவில் வந்து கண் சிமிட்டும் என்னவளே!
வழிமேல் விழி வைத்து, கூதல் காற்றினிலும், கொட்டும் பனியிலும் காத்திருப்பேன் உனக்காக………….

உனது எண்ணங்கள் யாவும்,எமது கண்களில் நிழலாடுகின்றது
நீ உலாவிய இடங்கள், பூமரங்கள், மலர்கள் உன்னை தேடுதம்மா
கண்திறந்து பார்த்திடுவாய், கண்முன் நாம் நிற்போம் என்று காத்திருந்தோம் அம்மா
காலனவன் கண் இமைக்கும் நேரமதில் கவர்ந்திட்ட நாளை
நாம் மறப்போமா..

இங்கு உன் பிரிவால் என்றும் அமைதியான வெறுமை தெரிகின்றதம்மா……

அன்னாரின் மரணச்செய்தி அறிந்து நாம் துயருற்ற வேளையில் நேரில் உடன் வந்தும்,
உள்நாடு, வெளிநாடுகளிலிருந்தும். கனடாவிலிருந்தும்
தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல்,
Ripbook ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும்,
அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், சகல உதவிகளையும் செய்த அன்பு
நெஞ்சங்களுக்கும், மற்றும் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டவர்கள்
மலர் வளையங்கள் வைத்தவர்கள், பத்திரிகையில் அறிவித்தலை பிரசுரிதவர்கள்,
இணையத்தளத்தில் பதித்தவர்கள். உணவளித்தவர்கள் அத்துடன்
16-05-2026 சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்ற வீட்டுக்கிரித்திகைகள்,
ஆத்மசாந்திப்பிராத்தனையில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும்
எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குடும்பத்தினர்
என்றும் மறவா உங்கள் நினைவுடன்
கணவன், மக்கள், மருமக்கள்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>