31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | அமரர் செல்லையா இராசம்மா

Share

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்த அமரர் செல்லையா இராசம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

எமை ஈன்றெடுத்த எம் அன்புத் தாயே
உங்கள் இன்முகம் தான் எங்கேயம்மா
இவ்வுலகில் எமைவிட்டுப் பிரிந்து
மாதம் ஒன்று ஆனதுவே அம்மா

பாசத்தை நமக்கு ஊட்டி வளர்த்த
பண்பான எம் அன்னையே
கண்ணின் இமையானீர் அன்று
எம் கண்ணீரின் கதையானீர் இன்று

எங்கள் பாச ஒளிவிளக்கே
மாதம் ஒன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் திருமுகம் எங்கள் நெஞ்சை
விட்டு என்றும் அகலாது அம்மா

ஏங்கித் தவிக்கின்றோம் ஏமாந்து போகின்றோம்
மீண்டும் ஓர் பிறப்புண்டேல்
உமக்கே பிள்ளைகளாய் பிறப்போம் அம்மா
வாரும் அம்மா ஒரு முறையேனும் எங்களிடம்….

அன்னையின் ஆத்மா சாந்தியடைய
இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பூட்டப்பிள்ளைகள் மற்றும் கொப்பாட்டப்பிள்ளைகள்.
ஐயனார் கோவில் வீதி, சுன்னாகம்

எமது குடும்பத் தலைவியின் மரணச் செய்தி கேட்டு இலங்கையிலும் கனடாவிலும் உதவிகள் புரிந்தவர்களுக்கும் உற்றார்,உறவினர், நண்பர்கள் மற்றும் அயலவர்கட்கும் இறுதிக்கிரியை,

இறுதியாத்திரை முதலியவற்றில் கலந்து கொண்டவர்களிற்கும் மலர்வளையம் வைத்தவர்க்கும் கண்ணீர் அஞ்சலிப் பத்திரிகை வைத்தவர்க்கும் தொலைபேசியில் ஆறுதல் வார்த்தைகள் சொன்னவர்கட்கும் சமுக வலைத்தளங்களில் இரங்கல் வார்த்தைகளைப் பதிவேற்றியவர்களிற்கும் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும்

மதியபோசனத்திலும் பங்கு கொண்டவர்களிற்கும் மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தகவல்
நந்தகுமார்
கனடா
416-473-8520

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>