31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | திருமதி. கந்தசாமி செல்லம்மா

Share

திருமதி. கந்தசாமி செல்லம்மா
அவர்கள்
(வாதரவத்தை, புத்தார்) – (திதி : ஏகாதசி)

எமது குடும்பத்தின் பாசத்தலைவியாய்
திகழ்ந்த எங்கள் அன்புத்தெய்வமே

எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எம் ஆளாக்கிய எங்கள் அன்னையே
உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில்
நேரில் வந்தும், தொலைபேசியூடகவும், மின்னஞ்சல்,
முகநூல்,RIP BOOK மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும்,
அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,

மலர் வளையம், மலர்மாலை சாத்தியவர்களுக்கும், உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிக ளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

ஊழிற் பெருவலி யாவுள மற்று ஒன்று
சூழினுந் தான்முந் துஉறும்

விதியைப் போல் வலிவுள்ள ஒரு பொருள் உலகில் வேறு இல்லை.
அவ்விதி மனிதனுடைய முயற்சிகளையெல்லாம் அழித்து தான் ஒன்றே முடிவில் வெல்கிறது

இங்ஙனம்:
குடும்பத்தினர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>