31ம் நாள் நினைவஞ்சலி | அமரர் உயர்திரு. சபேசன் செல்வராஜா

Share

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை வானுயர பெயர் துலங்க வைத்த அன்புத் தந்தையே நீங்கள் இறைவனடி சேர்ந்து 31 நாள் ஓடி மறைந்தாலும் எங்கள் உள்ளம் வேதனைத் தீயில் வெந்து துடிக்கிறது நிஜத்தில் இன்று நீங்கள் எம்முடன் இல்லை – ஆனாலும் எங்கள் மனம் ஏற்க மறுக்கிறது காணும் பக்க மெல்லாம் கண் முன்னே நிற்கின்றீகள் கணவனாய், அப்பாவாய், மகனாய், அண்ணணாய், மைத்துனராய் உடன் பிறவா, சகோதரனாய், நண்பனாய் பாசமே வேதமாய் எம்மை ஆட்கொண்டீர்கள் அப்பா – 31 நாள் கடந்தாலும் உங்கள் பூத்த புன்னகை முகமும் புன் சிரிப்பும் கண் முன்னே வந்து வாட்டுகிறது அப்பா, நிமிடத்திற்கு
ஒரு தரம், கலையா, காம்யித், அச்சம்மா கூப்பிடும் சத்தம் கேட்கிறது நீங்கள் எப்படி அப்பா போனீர்கள், நாங்கள் எப்படி அப்பா, ஆனந்தமாய் வாழ்வது வேதனையில் துடிக்கின்றோம்….. இறைவன் எங்கள் கண் முன்னால் உங்களை வா என்று அழைத்தானோ தெரியவில்லை, பெரியப்பா தான் அழைத்தரா தெரியவில்லை நீங்கள் இறைவன் காலடியில் இருந்து எங்களை
வாழ வைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்…..

உங்கள் ஆத்மா சாந்தியடையவும் பிராத்திக்கின்றோம்…

அன்பு மனைவி, பிள்ளைகள்,

அன்பு அப்பா, அம்மா,
தம்பி, பெறாமக்கள், மைத்துனர்,
மைத்துனி, உடன் பிறவா சகோதரங்கள், நண்பர்கள்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>