7ம் ஆண்டு நினைவாஞ்சம் | அமரர். அற்புதம்மா சந்தியாப்பிள்ளை

Share

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, உயரப் புலத்தைப் – பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அற்புதம்மா சந்தியாப்பிள்ளை அவர்களின் – ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி

கருவறை தொடக்கம் உலகெங்கும் நாம்- இன்று
கலங்கரை விளக்குப் போல் விளங்குவதற்கு – உன்னைக்
கரைத்து எம்மை ஆளாக்கிய அன்புத் தெய்வமே
கலக்கமின்றி துணிவுடன் தலை நிமிர்ந்து வாழ்கின்றோம் உன் வளர்ப்பில் நாம்

காலங்கள் பல கடந்தாலும் கனவெல்லாம் உன் காட்சியினை
கண்ணிறையக் கண்டு களிப்படைய நிஜமாக வாராயோ – அம்மா எம்
காலில் அடிபட்டால் உன் கண்ணில் நீர் வடியும் அம்மா
காலமெல்லாம் உன்மடியில் துாங்க நிஜமாக வாருமம்மா

கயவர்கள் காடையர்கள் மத்தியிலும் துணிவுடன் எம்மை
கண்ணியமாய் வளர்த்தாய் உன் துணிவு தான் எம்மை தலை நிமிர வைத்ததம்மா
கண்மை இமை காப்பது போல் என்றும் எம்மை காப்பாய்
எம் கரங்கள் பற்றி என்றும் வழிகாட்டுவாயம்மா….

என்றும் உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல்: உதயன் (மகன்)
(416) 843 0589

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>