70 பில்லியன் டொலர் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் ‘ஒன்ராறியோ லைன்’ விரிவாக்கப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன என்கிறார் ஒன்றாரியோ மாகாண இணை அமைச்சர் விஜேய் தணிகாசலம்!

Share

வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய போக்குவரத்து விரிவாக்கத் திட்டமான ஒன்ராறியோ அரசின் 70 பில்லியன் டொலர் திட்டத்தின் கீழ், ‘ஒன்ராறியோ லைன்’ உயர்மட்டப் பாதை மற்றும் நான்கு புதிய நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் ஸ்கார்பரோவின் மத்திய பகுதிக்கு விரைவான போக்குவரத்துச் சேவையைக் கொண்டு சேர்க்கும் ஸ்கார்பரோ சுரங்கப்பாதை விரிவாக்கத்தையும் உள்ளடக்கியது.

இது தொடர்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் இணைஅமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் கூறுகையில், இப்பெருந் திட்டங்கள் பயண நேரத்தைக் குறைப்பதோடு, மக்களை வேலைவாய்ப்புகளுடன் இணைத்து வலிமையான சமூகங்களை உருவாக்கும் என்றார். ஸ்கார்பரோ குடியிருப்பாளர்களுக்கு இது ரொறன்ரோ நகர மத்தியுடனான இணைப்பை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்துச் சேவையை உறுதி செய்யும். இக்கட்டுமானப் பணிகள் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஒரு புதிய யுகத்தை உருவாக்கும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>