8 பிலிம்பேர் விருதுகளை வென்ற “அமரன்” திரைப்படம்

Share

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அமரன்’ . வசூலிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்ற ‘அமரன்’ திரைப்படம் சமீபத்தில் நடைபெற்ற 70வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் 8 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை ஆல்பம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பின்னணி பாடகி உள்பட எட்டு பிரிவுகளின் கீழ் ‘அமரன்’ திரைப்படம் விருது வழங்கப்பட்டுள்ளது. 70வது பிலிம்பேர் விழாவில் 8 விருதுகளை குவித்ததை ஒட்டி ‘அமரன்’ படக்குழு சார்பில் காணொளி வெளயிடப்பட்டுள்ளது. இதில், “சினிமா மற்றும் போட்டிகளை கடந்த அமரன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>