கர்நாடகா இடைத்தேர்தல் – காங்கிரஸ் அமோக வெற்றி!
Share
கர்நாடகாவில் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைதேர்தலில் 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
கடந்த 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னர், கர்நாடகாவின் சந்தூர் தொகுதியில் துக்காராம் (காங்கிரஸ்) எம்.எல்.ஏவாகவும், ஷிக்கான் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை (பாஜக) எம்.எல்.ஏவாகவும், சன்னபட்னா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் குமாரசாமி (ஜனதா தளம்) எம்.எல்.ஏவாகவும் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி-கள் ஆன நிலையில் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து இந்த 3 தொகுதிகளிலும் கடந்த நவ.13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.23) நடைபெற்றது.
இந்த நிலையில், கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சி.பி. யோகேஷ்வர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார். சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி துக்காராம் மனைவி இ.அன்னபூர்ணா பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை தோற்கடித்துள்ளார். அதேபோல, ஷிக்கான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.