LOADING

Type to search

உலக அரசியல்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – 27 பலி

Share

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகருக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுற்றுலா பேருந்து மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டன. இதில் பேருந்தில் இருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மேடான் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர். கனமழையால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விளை நிலங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.