LOADING

Type to search

கனடா அரசியல்

ஒன்றாரியோ மாகாணத்திற்கான அடுத்த தேர்தலில் முதல்வர் டக் போர்ட் தலைமையில் எமது அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைக்கும்

Share

ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அமைச்சின் துணை அமைச்சருமான விஜேய் தணிகாசலம் தெரிவிப்பு

எமது ஒன்றாரியோ மாகாணத்திற்கான அடுத்த தேர்தலில் 2025ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் எமது முதல்வர் டக் போர்ட் அவர்கள் தலைமையில் எமது அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைத்து தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து திட்டங்களும் பூரத்தி செய்யப்பெறும். இதன் மூலம் எமது ஒன்றாரியோ மாகாணம் மேலும் அபிவிருத்தி அடைந்து மாகாண மக்கள் மகிழ்ச்சியுடன் அனைத்து வசதிகளையும் அனுபவிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

இவ்வாறு ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அமைச்சின் துணை அமைச்சருமான விஜேய் தணிகாசலம் தெரிவிப்பு நேற்று இரவு ஸ்காபுறோவில் நடைபெற்ற மாகாண கொன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் ஒன்றாரியோ மாகாணத்தின் வீடமைப்பு அமைச்சரும் ஸ்ரோவில் தொகுதியின் உறுப்பினருமான போல் கலேன்றிரா பிரதம பேச்சாளராக கலந்து கொண்டும் உரையாற்றினார். அத்துடன் அவர் தமது அரசாங்கத்திற்கும் அதன் அபிவிருத்திச் திட்டங்களுக்கும் தமிழ் மக்கள் அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார்.

Ganeshananthan- Local Journalism Initiative Reporter