கனடாவில் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அனைத்துலக தமிழர் பேரவை என்னும் சர்வதேச தமிழர் அமைப்பின் அறிமுகக் கூட்டம்
Share
கனடாவின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஜேசிஎஸ் விழா மண்டபத்தில் நாளை 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அனைத்துலக தமிழர் பேரவை என்னும் சர்வதேச தமிழர் அமைப்பின் அறிமுகக் கூட்டத்திற்கான அழைப்பு கனடா வாழ் அரசியல் செயற்பாட்டாளர்களான திருமதி செல்வன் ஶ்ரீதாஸ் மற்றும் திரு நிமால் விநாயகமூர்த்தி ஆகியோரால் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அமைப்பை நிறுவும் நோக்கத்துடன் இதற்கு முன்னர் சில கலந்துரையாடல் நடத்தப்பெற்ற நிலையில் நாளை இந்த அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்படி புதிய அமைப்பில் புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செயற்பாட்டாளர்கள் இணைந்து செயற்பட சம்மதம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு திருமதி செல்வன் ஶ்ரீதாஸ் அவர்களை 647 881 3613 என்னும் இலக்கத்திலும் – திரு நிமால் விநாயகமூர்த்தி அவர்களை 416 888 1128 என்னும் இலக்கத்திலும் அழைக்கலாம்.