யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற “தமிழ் அறிவு” நூல் வெளியீடு!
Share
பு.கஜிந்தன்
காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்திய, மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வானது 9ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.
மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய ஏழாவது படைப்பாக இந்த நூல் அமைந்துள்ளது.
பேராசிரியர் எஸ்.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நினைவுப் பேருரையை முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும், நூலின் ஆய்வுரையை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் கவிஞர் த.ஜெயசீலனும் ஆற்றியிருந்ததனர்.
நூலின் முதற் பிரதியை பேராசிரியர் ரட்ணஜீவன் எச்.ஹூல் வழங்கி வைக்க பேராசிரியர் அ.சண்முகதாஸ் அதனை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் காவேரி கலா மன்றத்தினர், தமிழ் அறிஞர்கள், மாணவர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்துகொண்டனர்.