அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் இசை 18 ஆம் தேதி வெளியீடு
Share
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். தன் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை சிறையில் இருந்து வெளிவந்து பழி வாங்கும் கதையாக அமைந்துள்ளது வணங்கான் திரைப்படத்தின் கதைக்களம். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். யு/ஏ சான்றிதழ் பெற்ற இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை வி கவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நந்தம்பாக்கத்தில் நடைப்பெறவுள்ளது. இவ்விழாவில் பாலா திரையுலகிற்கு வந்து 25 வருடம் நிறவடைந்த நிலையில் அதை கொண்டாடும் விதமாக இந்த விழா அமையவுள்ளது.