LOADING

Type to search

சினிமா

‘அமரன்’ படத்தின் ‘ஆசாதி’ காணொளி பாடல் வெளியீடு

Share

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகின. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் இதுவரை சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘அமரன்’ படத்தின் ‘ஆசாதி’ என்ற காணொளி பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார்.