LOADING

Type to search

இந்திய அரசியல்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து

Share

மத்திய கல்வி  அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

     சென்னை ஐஐடியில் இன்று நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க இருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கல்வி நிதியை வழங்காத மத்திய அரசுக்கும் அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தர்மேந்திர பிரதானின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.