LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தான் காஷ்மீர் பற்றி ஐநா மனித உரிமை கவுன்சிலில் பேச்சு – இந்தியா பதிலடி

Share

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளது. எனினும், காஷ்மீர் பிரச்சினையில் தேவையின்றி மூக்கை பாகிஸ்தான் நுழைத்து வருகிறது. அதிலும் ஐநா போன்ற சர்வதேச மன்றங்களில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பும் பாகிஸ்தான் அதற்கான விலையையும் கொடுத்து வருகிறது. ஆனாலும் திருந்தியபாடில்லை. இந்த நிலையில்தான், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் ஜெனிவாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, இந்தியா மீது பாகிஸ்தான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எழுப்பியது. இதற்கு இந்திய அதிகாரிகள் தக்க பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தானின் சட்டம், நீதி மற்றும் மனித உரிமைகள் துறை மந்திரி அசாம் நசீர் டரார் பேசுகையில், ‘காஷ்மீரில் வசிக்கும் மக்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.நா.,வின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறப்படுகிறது. தொடர்ந்து, மனித உரிமைகளும் மீறப்படுகிறது. உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டும்,’ எனக் கூறினார். பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய அதிகாரி தியாகி பதிலடி கொடுத்தார். அவர் கூறும் போது, பாகிஸ்தானின் ஆதாரமற்ற, போலியான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதி கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது.பாகிஸ்தானில் தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இல்லை” என்றார்.