LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்கா கடற்கரை சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை

Share

அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள். தோழிகளான மூன்று பேரும் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றனர். குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர்கள் மூன்று பேரும் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் பரிதாபமாக செத்தனர். தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பெண்களின் உடலையும் மீட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை துப்பு துலக்கினர். அறையில் இருந்த காலி மதுபாட்டில்கள், போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் அதீத போதை காரணமாக இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.