மலேசிய இந்து சங்க பாகோ வட்டாரப் பேரவையின் திருமுறை விழா
Share
-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.07:
மலேசிய இந்து சங்கம், ஜோகூர் மாநிலப் பேரவையில் இடம்பெற்றுள்ள பாகோ வட்டாரப் பேரவையின் 44ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 06, காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை, பாகோ லனட்ரோன் தோட்ட பழனியப்பா கிளைப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
சைவ சமயத்தின் பக்தி இலக்கியப் பெட்டகமான திருமுறையின் ஒன்றாம் பிரிவு முதல் ஐந்தாம் பிரிவு வரையிலான திருமுறை ஓதுதலில் 80 மாணவர்கள் பங்கு கொண்டனர்.
இவ்விழாவிற்கு ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு முகமட் ஃபஸ்லி முகமட் சாலே, இந்து சங்க ஜோகூர் மாநிலத் தலைவர் ‘சங்கரத்னா’, ‘ஸ்ரீகாசி’ ஆர்.இராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர் என்று பாகோ வட்டாரப் பேரவையின் தலைவர் ஆர். பொன்னுசாமி தெரிவித்தார்.
தொண்டர் மணி மு.கைலாசம், தொண்டர் மணி கு.பாஸ்கரன், வட்டாரப் பேரவை துணைத் தலைவர் ஆ.சுந்தரம், செயலாளர் திருமதி பி.சுகுமாரி, துணைச் செயலாளர் டி.விசுவநாதன், பொருளாளர் கே.இராஜு, துணைப் பொருளாளர் ஏ.பழனி, மகளிர் தலைவி திருமதி எம்.தனலட்சுமி, துணைத் தலைவி திருமதி எம்.வாணிஸ்ரீ, இளைஞர் தலைவர் எஸ்.சுரேஷ், இளைஞர் பிரிவு துணைத் தலைவர் ஜி.குமரன் ஆகியோருடன் அரசியல் இயக்கமான மலேசிய இந்தியர் காங்கிரஸ்(மஇகா) பாகோ தொகுதி செயலாளர் க.நாக-லிங்கம், மஇகா பாகோ தொகுதி இளைஞர் பகுதி தலைவர் க. முனியாண்டி, மஇகா பாகோ தொகுதியின் பொருளாளர் வே. சந்திரகுமார் ஆகியோரெல்லாம் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு உறுதுணையாக இருந்து உதவிபுரிந்த சுற்று வட்டார தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், செயல்குழு பொறுப்பாளர்-கள், இந்து சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புத் தலைவர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்ச்சியின்போது காலைச் சிற்றுண்டி, மதிய உணவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக ஆர். பொன்னுசாமி தெரிவித்தார்.