LOADING

Type to search

இலங்கை அரசியல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

Share

(15-02-2023)

குருந்து கஹஹெதெக்மவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 14-02-2023 இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வேகமாக வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னதுவையிலிருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற லொறி இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது லொறியின் சாரதி வாகனத்தை சோதனை செய்து கொண்டிருந்தார்.

இந்த விபத்தில் காரின் சாரதி, அவரது தந்தை மற்றும் இரு குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.

சாரதியின் தந்தையும் அவரது மாமாவும் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 75 வயதுடைய திருக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சடலங்கள் தற்போது நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலே காணப்படும் இந்த விபத்து செய்தி தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் நண்பர் கோவிலூர் செல்வராஜன் பதிவொன்றை இட்டுள்ளார். இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்கள் தனது உறவினர்கள் நண்பர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நண்பர் கோவிலூர் செல்வராஜ அவர்கள் தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இடம்பெற்ற இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கனடாவில் வசித்து வருபவர் என்றும் விடுமுறைக்காக இலங்கைக்குச் சென்று நாடு திரும்புவதற்காக கொழும்பு சென்றபோதே விபத்து ஏற்பட்டதாக அறியப்படுகின்றது

திருக்கோவிலை சேர்ந்த இருவர் நேற்று (14.02.)கொழும்பு, கழுத்துறை அதிவேக நெடு ஞ்சாலையில் நடந்த வாகன விபத்தில் உயிர் இழந்துள்ளார்கள். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளார்கள் என்ற செய்தி எனக்கு கனடாவிலிருந்து இன்று காலை கிடைத்தது. இதை நான் திருக்கோவிலுக்கு எனது உறவுக்காரர் ஒருவருடன் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொண்டேன்.உயிர் இழந்தவர்கள் திருக்கோவில்லை சேர்ந்த அண்ணனும். தம்பியும். அண்ணன் கேதாரவரதசுந்தரம் (வாவா )

தம்பி நாகசுந்தரம். அண்ணன் திருக்கோவிலில் வாழ்ந்தவர். தம்பி புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்ந்தவர். இவர் குடும்பத்துடன் விடுமுறைக்காக ஊர் சென்று மீண்டும் கனடா திரும்புகையில் இந்த விபத்தில் உயிர் இழந்துள்ளார். அண்ணா வழியனுப்ப வந்த நேரம் அவரும் மரணத்தை தழுவியுள்ளார். இவர்கள் முன்னாள் திருக்கோவில் முருகன் ஆலய வண்ணக்கராக இருந்த தங்கராஜா ( ஓவசியர்)அவர்களின் புதல்வர்கள் ஆவார்கள்.இவர்களது உடல்கள் நாளை நாகொடா வைத்திய சாலையிலிருந்து திருக்கோவிலுக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன. கனத்த இதயங்களுடன் கனடாவில் வாழும் மற்றும் நான்கு சகோதரர்கள் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள பயணிக்க இருப்பதாகவும் அறிய முடிந்தது. மனதை உலுக்கிய இந்த விபத்தால், உயிர் இழப்புகளால் ஊரே சோகத்தில் மூழ்கி உள்ளதாகவும் அறிந்து வருந்தினேன்.

மரணித்தவர்கள் எனக்கு ஒரு வழியில் உறவுக்காறாரே. இவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும். இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதுடன். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன். ஓம் சாந்தி.