Toronto’s Strickers Soccer Team Participated in Brasil Deni Cup Tournament
Share
ரொறன்ரோவின் Strickers உதைப்பந்தாட்ட அணி பிரேசில் நாட்டின் Deni Cup Tournament இல் கலந்து கொண்டு நாடு திரும்புகின்றது
சில நாட்களுக்கு முன்னர் பிரேசில் நாட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற Deni Cup Tournament போட்டிகளில் பங்கெடுப்பதற்காக அங்கு சென்ற ரொறன்ரோவின் Strickers உதைப்பந்தாட்ட அணி தற்போது நாடு திரும்புகின்றது. அங்கு மூன்று போட்டிகளில் பங்கெடுத்த ரொறன்ரோ அணிக்கு பாராட்டுக் கேடயம் வழங்கப்பெற்றது.
பிரேசில் நாட்டில் உள்ள பலம் நிறைந்த உதைப்பந்தாட்ட அணிகளோடு நேரடியாக மோதி நல்ல அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்புகின்றார்கள் என ரொறன்ரோவின் Strickers உதைப்பந்தாட்ட அணியின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
மேற்படி ரொறன்ரோ Strickers அணியில் ஒரேயொரு தமிழ் பேசும் இளம் வீரர் ஜஸ்வின் இந்துநாதன் பங்கெடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த அணி பிரேசில் உதைப்பந்தாட்டப் போட்டிகளின் போது 1994ம் ஆண்டு பிரேசில் நாட்டின் தேசிய உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி வீரராகத் திகழ்ந்த பிராங்கோ அவர்களையும் சந்தித்து அவரது வாழ்த்துக்களையும் பெற்றனர்.