LOADING

Type to search

இலங்கை அரசியல்

தொடரும் நில அபகரிப்பு: தீவகப் பகுதிகளும் பறிபோகவுள்ளதா?

Share

நடராசா லோகதயாளன்

இலங்கையிலுள்ள தீவகம் முழுவதையும் அதிகார சபை ஒன்றுக்குள் கெிண்டுவந்து அனைத்து நிர்வாகத்தையும் கொழும்பின் கீழ் கொண்டு வருவதற்குரிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

த.தே.ம.முன்னணியின் அலுவலகத்தில் வியாழனன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

”13ம் திருத்தத்தை அமல்படுத்துவதாக கூறி மக்களை ஏமாற்றும் அதே தருணம் இந்த அரசு தீவகம் முழுவதையும் ஒரு அதிகார சபைக்குள் கெிண்டுவந்து அனைத்து நிர்வாகத்தையும் கொழும்பின் கீழ் கொண்டு வருவதற்குரிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீவகத்தின் அதிகார கட்டை்மப்பானது மகாவலி அபிவிருத்தியை விட மிக மோசமாக தமிழரின் தலைவிதியை மாற்றியமைக்கக் கூடிய வகையில் கொழும்பால் மட்டும் நிர்வகிக்கக்கூடியவாறானதாக உத்தேச சட்டம் காணப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்காவிற்கு முண்டுகொடுக்கும் தரப்பிற்கு இவ்விடயம் முற்றாக தெரிந்த விடயம். மக்களின் வாழ்க்கையை நடாத்த முடியாதவளவிற்கு மக்கள் அங்கிருந்து இடம்பெயரும் நிலையே உள்ளது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுற்றுலா போன்ற விடயங்களை காட்டி சி்ங்கள மயமாக்லுக்காகவே பயன்படுத்தப்படுகினது.

தீவகம் இந்திய இலங்கைக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. எனவே அது பேரம் பேசுதல்களுக்காக சிஙகளத் தரப்பிடம் இருக்க வேண்டுமென்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்திய ரோலர்கள் எமது கடற்தொழிலாளர்களின் சொத்துக்களை அழித்து தொழில் செய்வதற்கு அவமதித்தலைப் போலவே தீவக கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது” என்று செய்தியாளர்களிடம் கூறினார் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

”13ம் திருத்தச்சட்டத்தை அமல்ப்படுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி செயலகத்திலிலுந்து மீண்டுமொருமுறை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடு்கப்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு தமிழ்மக்களிற்கு தீர்வு வழங்கப்போவதாக கூறி அரசியலமைப்பிலுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமலாக்க பேச்சுவா்த்தை நடாத்துவதானது ஈழத்தமிழர்களை ரணில் விக்கிரமசிங்க கணக்கெடுக்கத் தயாரில்லை என்பதைக் காட்டுகின்றது. இதை தெரிந்துகொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தமிழ்த் தரப்புகளின் பேச்சுதலுக்கு வாய்ப்புக்ளை இல்லாமலாக்கி சிங்கள மக்கள் ஏற்று்கொள்ளாத ரணில் விக்கிரமசிங்காவிற்கு முண்டு கொடுப்பதாகவே அமைகின்றது”.

சட்டபூர்வமாக ஒன்றுமில்லாத 13ம் திருத்தச் சட்டத்திற்குள் பேச்சுவார்த்தையை முடக்கி அரசாங்கத்திற்கு வெள்ளையடித்து சிங்களமயமா்கலுக்கு அவர்கள் உதவுகின்றனர் என்றார் அவர்.

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின் சுயநிர்ணயத்தை பாதிக்கும் எவ்வித அபிவிருத்தி்கும் தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அதற்கு துணைபோகும் தரப்பினர்களுக்கெதிராக மக்களை அணிதிரட்டுவோம் என்றும் அவர் கூறினார்.

மலையக மக்களின் வருகையின் 200ஆம் ஆண்டை நினைவு கூரும் சந்தர்ப்பத்தில் இந்நாட்டின் வளர்ச்சி்க்கு வித்திட்ட மக்களின் பொருளாதாரத்தை அழி்க்கும் நோக்கில் கடன் சீரமைப்பு அமைந்துள்ளது. சகல விதத்திலும் எடுத்து நோக்கினால் இந்த ஆட்சி மலையக மற்றும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கான எவ்வாாற நீதியையும் வழங்கப்போவதில்லை என்பதுடன் சிங்களவருக்கும் எவ்வித தீர்வையும் வழங்கப்பபோவதில்லை என்றார்.

வடக்கு-கிழக்கில் சமஷ்டிக்கான ஆணையைப் பெற்றவர்கள் 13ம் திருத்தச் சட்டத்திற்குள் முடக்குவதற்கு செயற்படுகின்றார்கள். இத்துடன் மனோ கணேசன் 13ம் திருத்தச்சட்டம் பற்றியும் இந்தியாவின் நிலைப்பாடும் பற்றி கூறிய கருத்தானது மலையக அரசியலை மையமாகக் கொண்டு செயற்படும் மனோ கணேசனேசனுக்கு வடகிழக்கு அரசியல் தன்மை புரியாமலுள்ள விதமே காரணமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்துடன் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பை நினைவுபடுதுகின்றோம். 1983ம் ஆண்டு இடம்பெயர்ந்து வடக்கிற்கு வந்த போது எமது உரிமைப் போராட்டத்தில் இணைந்து பயணித்தனர். அவர்களின் பங்களிப்பு போராட்டத்தில் உச்சமாக இருந்தது.

இதேவேளை எமது கட்சியினுடைய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ராஜினியுடைய வீட்டினுள் புகுந்த பொலிசார் அவருககு அச்சுறுத்தும் விதமாகவும் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் விதமாகும் நடந்துள்ளனர். இது சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தற்போது வடகிழக்கிற்கு இடமமாற்றத்தில் வரும் பொலிசார் பொரும்பாலும் தண்டணை முறை இடமாற்றத்தினூடாகவே பணிக்கமர்த்தப்படுகின்றனர். அவர்கள் நீதியின்பால் செயற்படாமல் மக்களின் காசை கெள்ளையடித்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கலாச்சாரத்ததையே தொடரந்துகொண்டிருக்கின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.