LOADING

Type to search

இலங்கை அரசியல்

புத்தளம், சிலாபம் வலய பாடசாலைகளில் திறன்பலகைகளினூடு கற்றல் செயற்பாடுகள் முன்னெடுப்பு.

Share

வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் மற்றும் சிலாபம் கல்வி வலயங்களில் முதல் கட்டமாக 14 பாடசாலைகளில் திறன் பலகைகள் பொருத்தப்பட்ட திறன் வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

திறன் பலகைகளை வழங்கி திறன் வகுப்பறைகளை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை IMHO-USA மற்றும் Ratnam Foundation-UK மேற்கொண்டது மட்டுமன்றி அவ்வப் பாடசாலை ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிகளையும் திறமையான வளவாளர்களைக் கொண்டு வழங்கியிருந்தது.

இதற்கு மேலதிகமாக வகுப்பறை செயற்பாடுகளை what’s up குழுமத்தினூடு அறிந்து கொள்வதிலுள்ள நாட்டங்களும் ஆசிரியர்களுக்கான ஓர் ஊக்குவிப்பாக அமையப்பெற்றுள்ளமை சிறப்பான அம்சமாக நோக்கப்படுகின்றது.

திறன்வகுப்பறைகளை திறந்து வைக்கும் ஆரம்ப வைபவங்களில் புத்தளம் கல்வி வலயத்தின் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான பணிப்பாளர் திரு.கமலேந்திரன் அவர்களும் சிலாபம் கல்வி வலயத்தின் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான பணிப்பாளர் திருமதி ஹனித்தா கமலேந்திரன் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.அருணாகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை இத்திட்டத்திற்கு வலு சேர்த்துள்ளது.இவர்களுடன் இதன் இணைப்பாளரான, நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலய அதிபர் திரு இராமநாதன் அவர்களும் இணைந்து ருந்தார்கள்.

இதற்கு அடுத்த கட்டமாக மேலும் 6 பாடசாலைகள் பரிந்துரை செய்யப்பட்டு
திறன் வகுப்பறைகளை திறந்து வைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவையாவும் IMHO-USA அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளரும் ஓய்வுநிலை வலயக் கல்விப்பணிப்பாளருமாகிய திரு.கிருஷ்ணகுமார் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.