LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடமாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளராக கடமையாற்றும் திருவாகரனுக்கு சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் பதவி வழங்க வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார். வடமாகாண பொது சேவை ஆணைக்குழு வட மாகாண அமைச்சுகளின் இடமாற்றம் மற்றும் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் சுயாதீனமாக முடிவெடுக்கும் ஒரு ஆணைக்குழுவாக செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுச் சேவை ஆணை குழுவின் செயலாளராக பதவி வகிக்கின்ற முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளரான திருவாகரனை மேலதிகமாக வட மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக வடமாகாண ஆளுநர் நியமிக்கவுள்ளார். குறித்த நியமனமானது சுயாதீனமாக இயங்குகின்ற வடக்கு பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தேவையற்ற தலையீடுகளை ஏற்படுத்தும். இந்நிலையில் குறித்த நியமனம் தொடர்பில் வடமாண தாதியர் சங்கம் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் முதற்கட்டமாக இலங்கை தாதியர் சங்கங்களின் தாய் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிற்சங்கங்களின் ஆலோசகராகவும் செயல்படுகின்ற சமன் ரட்ணப் பிரியாவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் வர நாட்களில் எழுத்து மூலமாக முறைப்பாடு ஒன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நாளை திங்கட்கிழமை திருவாகரன் பதவியை ஏற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

பு.கஜிந்தன்

இந்தியா சென்ற ஜனாதிபதி ரணில் ஆல் எமக்கு பயனில்லை – சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவிப்பு

அண்மையில் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவித்தார்.

இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் அத்துமீறலகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகிறது.

இந்திய அத்துமீறிய மீன்பிடியினால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நாமும் பல தடவைகள் இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிட்டோம்.

இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்றார்.

அவர் செல்வதற்கு முன்னர் அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் ஜனாதிபதி இது குறித்து இந்திய பிரதமரிடம் பேசியதாக தெரியவில்லை.

இவ்வாறான நிலையில் பருத்தித்துறை தொடக்கம் மன்னர் வரையான நமது கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே எமது மீனவர்களை தொடர்ச்சியாக இந்திய அத்துமீறிய மீன்பிடி படகுகளின் வருகையால் பாதிக்கப்பட்டு வர நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

தற்போது அமைச்சர டக்ளஸ் தேவானந்தா சீன சென்றுள்ள விடயம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு விதமாக பேசப்பட்டு வருகிறது.

அமைச்சர் கடந்த மாதம் இந்தியா சென்றார் இந்த மாதம் சீனா செல்கிறார் எதிர்வரும் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக அறிகிறோம்.

அமைச்சர் ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்வது வழமையான விடயமாக பார்க்கப்படுகின்ற நிலையில் எமது கடற்தொழில் அமைச்சர் எமது மீனவ மக்களின் பொருளாதார ரீதியான அபிவிருத்திக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆசியா அவிருத்தி வாங்கியும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்காக உதவி செய்ய உள்ள நிலையில் ஜப்பான் நாடும் மீனவ மக்களின் தொழிலுக்கு தேவையான உபகரணங்களை வழங்க உள்ளதாக அறிகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.