பேராசிரியர் எஸ்.வசந்தபிரியனுக்கு வழங்கப்பட்ட CSSL ICT கல்வியாளர் 2022 விருது
Share
பு.கஜிந்தன்
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக கணினிப் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக பணியாற்றும் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் அவர்களுக்கு CSSL ICT கல்வியாளர் 2022 விருதினை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 11ம் திகதி சங்கிரிலா ஹோடேலில் வழங்கி கௌரவித்தார்.
இலங்கையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) அறிவையும் ICT கல்வியின் வளர்ச்சியையும் வழங்குவதில் குறிப்பிடத்தக்க தேசிய பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது பேராசிரியர் ச. வசந்தப்ரியனுக்கு வழங்கப்பட்டது
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் ச. வசந்தப்ரியன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 97ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர். இவர் தனது கலாநிதிப் பட்டத்தை சீனாவின் வுஹான் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும், முதுகலை அறிவியல் பட்டத்தை எய்ந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் (Eindhoven University of Technology), கணினி விஞ்ஞானத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகழகத்திலும் பெற்றார்.
2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் முதல் இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ச. வசந்தப்ரியன், இளம் வயதில் கணினி பேராசியராக உயர்வடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.