வட்டுக்கோட்டை இளைஞர் ’கொலை’ வழக்கில் அனைத்து சட்டத்தரணிகளையும் ஆஜராகும்படி வேண்டுகோள்
Share
நடராசா லோகதயாளன்.
வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த இளைஞனின் இன்றைய வழக்கு நடவடிக்கைக்கு வடக்கின் அனைத்து சட்டத்தரணிகளையும் மன்றில் முன்னிலையாக யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானதனால் உயிரிழந்த்தாக கருதப்படும் நாகராசா அலெக்ஸ்சின் மரணம் தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்வாறு இடம்பெறும் வழக்குத் தொடர்பில் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் 4 தீர்மானங்களை வெளியிட்டுள்ளது. அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானத்தில்,
01.இன்றைய வழக்கிற்கு யாழ்ப்பாணம் சட்டத்த்ணிகள் அனைவரும் முன்னிலையாவது.
02. வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சங்கம் அனைவரும் இந்த வழக்கில் முன்னிலையாக அழைப்பு விடுவது.
03. உயிரிழந்தவரின் மரணத்தோடு சம்பந்தப்பட்டோரை உடன் கைது செய்யுமாறு பொலிசாருக்கு அழுத்தம் கொடுப்பது.
04. இந்த விடயத்தை புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைப்பது போன்ற தீர்மானங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளது.