இந்தியாவின் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட சாந்தன் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்க இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியிடம் வேண்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்
Share
நடராசா லோகதயாளன்.
இந்தியாவின் உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட சாந்தன் இலங்கை திரும்ப விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடன் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய சிறையில் 32 ஆண்டுகள் சிறைவாசம் இருந்த நிலையில் தீதிமன்றினால் விடுவிக்கப்பட்டும் நாடு திரும்ப முடியாது தவிக்கும் தனது மகனின் வருகைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் விடுத்த கோரிக்கையின் பெயரில் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளின் உதவியை கோரியுள்ள அதே நேரம் இலங்கை அரசு சார்பில் வழங்க வேண்டிய அனுமதிகளை நீதி அமைச்சரிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் அமைச்சர் உடனடியாக இந்தியாவில் உள்ள துணைத் தூதர் வெங்கடேஸ்வரன் ஊடாக அவரது வருகைக்கான ஏற்பாடுகளிற்கான அனுமதிகளிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளதோடு துணைத் தூதரிடமும் நேரில் பேசுமாறு அறிவுறுத்தினார்.
இதற்கமைய இந்தியாவில் உள்ள இலங்கைக்கான துணைத் தூதர்
வெங்கடேஸ்வரன் மேற்பொள்ளும் நடவடிக்கை தொடர்பிலும் தொடர்புகொள்ளப்பட்டது..
இதற்கமைய சகல ஆவணமும் தயாரித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கு உடன் அனுப்பி வைக்கப்பட்டு அந்த அனுமதி பெறப்பட்டதும் இலங்கை வருவதில் தடை இருக்காது என உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.