அகில இலங்கை தமிழர் மகா சபையின் 10 தேசிய மாகாநாட்டில் கட்சி தலைவராக மீண்டும் கலாநிதி காசிலிங்கம் விக்கினேஸ்வரன்
Share
(கனகராசா சரவணன்)
அகில இலங்கை தமிழர் மாகாசபை கட்சியின் புதிய தவைராக மீண்டும் கலாநிதி காசிலிங்கம் விக்கினேஸ்வரன். தவிசாளராக ஓய்வு நிலை பேராசிரியர் மாநாகப்போடி செல்வராஜா ஆகியேர் கட்சியின் 10 தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் 10 வது தேசிய மாநாடு திருகோணமலை உப்புவெளி நிலாவெளிவீதியிலுள்ள சர்வோதயா கேர்பேர் கூடத்தில் கடந்த 28 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன் போது கட்சியின் தலைவராக கலாநிதி காசிலிங்கம் விக்கினேஸ்வரன், தவிசாளராக ஓய்வு நிலை பேராசிரியர் மாநாகப்போடி செல்வராஜா, துணைதவிசாளர் 1, ஓய்வுநிலை பேராசிரியர் சுப்பிரமணியம் மோகனதாஸ், துணைதவிசாளர் 2, திருமதி சுகந்தினி நகுலேஸ்வரன், செயலாளர் செபஸ்தியான் ஆரோக்கிய நாயகம், பொருளாளர் திருமதி சேவயர் கத்தரின்,
தேசிய அமைப்பாளர் தேவரெத்தினம் டேவிட் நிதர்ஷன், பிரதி செயலாளர் திருமதி டொறின் பிரியதர்ஷpனி அரவிந்தன், பிரதி பொருளாளர் கலாநிதி மக்ஸ்மின் பிரான்சிஸ், பிரதி தேசிய அமைப்பாளர் பரந்தாமன் அச்சுதராஜா ஆகியோர் நிநைவேற்றுகுழு உறுப்பனர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 10 பேரையம் கொண்ட ஆரம்ப நிறைவேற்றுக்குழுவானது அதன் முதலாவது கூட்டத்தில் விடயங்களுக்கான மதியுரைஞர்களையும் இணைப்பாளர்களையும் மாவட்ட அமைப்பாளர்களையும் தேர்ந்தெடுக்கும் அதன் பின்னர் அவர்களையும் சேர்த்தே இறுதியில் நிறைவேற்றுக்குழு அமையும் என கட்சி தலைவர் கலாநிதி காசிலிங்கம் விக்கினேஸ்வரன் தெரிவித்தர்.