தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு பல நாடுகள் பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் உதவி செய்துவருகின்றன என்கிறார் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணி க.சுகாஸ்
Share
(கனகராசா சரவணன்)
தமிழ் மக்களின் குரல்வலையை நசுக்குவதற்கு ஒடுக்குவதற்கும் ஜனநாயகத்தை பாதுகாக்கின்றோம் என்ற பேர்வையிலே இலங்கையினுடைய நண்பர்கள் என கூறிக் கொண்டு பல வெளிநாடுகள் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் உதவி செய்துவருகின்றனர் இதனை சர்வதேச நாடுகள் உணரவேண்டும் இவை அனைத்தும் இலங்கையில் நிறுத்தவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிவ் இன்று திங்கட்கிழமை (5) இடம்பெற்ற ஊடகமாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்றைய தினம் இலங்கையினுடைய சுதந்திர தினம் தமிழ்ககளை பொறுத்தமட்டில் கரிநாள் என்பதை வலியுறுத்தி தமிழ் தாயகமான வடகிழக்கு எங்கும் பாரிய மக்களுடைய போராட்டங்களும் எதிர்ப்பு அலைகளும் நடைபெற்றது
இதனை அடக்குவதற்காக இலங்கையின் அரச இயந்திரமான பொலிசாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் சகல பல பிரயோகத்தை உபயோகித்துள்ளமையை அவதானிக்க முடிந்தது இது வன்முறையினுடைய உட்சகட்டம் ஜநனாயத்தின் குரல்வலையை நசுக்குகின்ற செயற்பாடு தமிழ் மக்களின் கருத்துக்களை குறைந்த பட்சம் வெளிப்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்பதை இலங்கை அரசும் அரச இயந்தரமான பொலிசாரும் இராணுவத்தினரும் மீண்டும் ஒருதடவை சொல்லி இருக்கின்றனர்.
தமிழர் தாயகத்தை பொறுத்தளவில் யாழ்ப்பாணம், கிளிநோச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற பிரதேசங்களில் கரிநாளாக சுதந்திர நாளாக அனுஸ்டிக்க தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
அம்பாறையில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் நானும் எனது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியும் பங்கேற்றோம் அப்போது அம்பாறை மாவட்டமக்கள் வருகை தந்திருந்த 3 பேரூந்துகளை பொலிசார் நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.
பேரூந்துகளின் உரிமையாளர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பதுடன் ஆர்பாட்டம் முடிந்த பின்னர் ஒரு பேரூந்தை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் உரிமையாளரை அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில்; பல்கலைகழக மாணவர்கள் மிக பயங்கரமாக படுமோசமாக தாக்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தாக்கப்பட்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார் அப்பாவிகளான மக்கள் கருத்துக்களை ஜனநாயக முறையில் வெளிபடுத்திய பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் இது அனத்துமே ஜனநாயத்தின் மீதான தாக்குதல் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்
இந்த தாக்குதலின் வாயிலாக சர்வதேசத்திற்கு ஒரு விடையத்தை செல்லுகின்றோம் ஜனநாயகத்தை பாதுகாக்கின்றோம் என்ற பேர்வையிலே இலங்கையினுடைய நண்பர்கள் என கூறிக் கொண்டு பல வெளிநாடுகள் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் உதவி செய்துவருகின்றனர்.
இலங்கையை பொருளாதார நெருக்கடிக்கு கைகொடுக்கின்றோம் என்ற பேர்வையிலே சில நாடுகள் டொலர்களை வாரிவாரி வழஙகி கொண்டிருக்கின்றனர் சர்வதேச நாணய நிதியம் உட்பட இவர்கள் வழங்குகின்ற நிதியை பயன்படுத்திதான் இத்தகைய அட்டூழியங்களும் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளும் அடக்கு முறைகளும் தமிழர் தாயகம் எங்கும் மிக வீச்சாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது
கட்டமைக்கப்பட்ட இனழிப்பு முன்னெடுக்கப்பட்டுக் காண்டிருக்கின்றது எனவே இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகள் சிந்திக்க வேண்டும் நேற்றைய தினம் நடாத்தப்பட்டது ஒரு அப்பட்டமான காட்டுமிராண்டித்தனம் ஜனநாயத்தின் மீதும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ஆகவே ஜனநாயத்தை பாதுகாப்பதற்காக இலங்கைக்கு நிதிஉதவி அளிக்கின்ற நாடுகள் இலங்கை அரசுக்கு வழங்க போகின்ற செய்தி என்ன ?
அவர்கள் இதனை வெறுமனவே பார்த்துக் கொண்டிருக்க போகின்றார்களா? தமிழ் மக்களின் குரல்வலையை நசுக்குவதற்கு ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது இதனை சர்வதேச நாடுகள் உணரவேண்டும் இவை அனைத்தும் இலங்கையில் நிறுத்தவேண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் இனபிரச்சனைக்கு தீர்வும் வழங்கப்படவேண்டும் என்றால் உடனடியாக ஈழத்தில் நடாத்தப்பட்ட நடாத்திக் கொண்டிருக்கின்ற இனழிப்பிற்கு ஒரு சர்வதேச விசாரணை நடாத்துவதுதான் தீர்வாக இருக்கும் என்றார்.