LOADING

Type to search

இலங்கை அரசியல்

கப்பல் விவகாரம்: இலங்கை மீது சீனா கடும் அதிருப்தி

Share

நடராசா லோகதயாளன்

இலங்கை கட ற்பரப்பிற்குள் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை அரசு விதித்த தடை குறித்து சீன அரசு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி கோரியபோதும் அதறகு இலங்கை அரசு தடைவிதித்துள்ளமை குறித்தே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் எந்தவகையான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கும் இலங்கை அரசு ஒருவருடகால தடையை விதித்துள்ளது.

இதன்னால் சீனாவின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் தென் இந்திய கடற்பரப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முனகூட்டியே திட்டமிட்டிருந்த நிலையிலேயே இலங்கை அரசு இந்த தடையை அறிவித்தமை சீனாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி
கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு உரியதேயன்றி இராணுவப் பயன்பாட்டிற்கானது அல்ல எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தனது அயலில் ஆராய்ச்சிகள் இடம்பெறுவது குறித்த பாதுகாப்பு கரிசனையை இந்தியா வெளியிட்ட நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இந்த தடையை விதித்திருப்பதாக சீனா திடமாக நம்புகின்றது.

இந்த நம்பிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக இந்திய ஊடகங்கள்

இந்தச் செய்தியை சீனாவிற்கு விழுந்த அடி எனத் தலைப்பிட்டு வரைந்தமை குறிப்பிடத்தக்கது .

சீன அதிகாரிகள் இலங்கையின் இந்த முடிவு தொடர்பில் தற்போது கடும் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சீனா அடுத்து என்ன காய் நகர்த்தலை செய்யவுள்ளது என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.