தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கார்த்திகைப்பூ வடிவில் இல்ல அலங்காரம் செய்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.
Share
ஆனால் அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ள ‘கூலி’ப் பொலிஸ்!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேற்படி கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இல்லங்களில் ஒன்றின் முகப்பில் ‘கார்த்திகைப் பூ’ அழகிய முறையில் மிகுந்த மரியாதையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்த காரணத்தாலேயே இந்த விசாணைக்கான அழைப்புக்கிடைத்துள்ளதாகவும் யாரோ ‘கயவர்கள்’ பொலிசாருக்கு இந்த விடயத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
குறித்த இலத்தின் பொறுப்பாசிரியர்கள் மற்றும் கல்லூரி அதிபர் மற்றும் மாணவர் தலைவர்கள் சிலர் என பலரது பெயர்களைக் குறிப்பிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் இந்த செய்தி எழுதப்படும் நேரத்தில் விசாரணைகளின் முடிவுகள் எமது ஆசிரிய பீடத்திற்கு கிடைக்கவில்லை.