LOADING

Type to search

இந்திய அரசியல்

முதன்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர்

Share

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்கு பயணம் மெற்கொள்கிறார். இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

     உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஜன.22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து,  இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்கு பயணம் மெற்கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குடியரசுத் தலைவர், ஸ்ரீ ஹனுமான் கர்ஹி கோயில், பிரபு ஸ்ரீ ராமர் கோயில் மற்றும் குபேர் டீலாவில் தரிசனமும், சரயு பூஜை மற்றும் ஆரத்தியும் செய்வார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.