LOADING

Type to search

இந்திய அரசியல்

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுப்பு! – 5 தனிப்படைகள் விசாரணை!

Share

நெல்லையில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் பாதி எரிந்த நிலையில் உவரி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

      நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில்,  அவரை 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் ஜெயகுமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடல் பாதி எரிந்த நிலையில் காணப்படுவதால் அவரை கொலை செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லை விரைகிறார்.