LOADING

Type to search

இந்திய அரசியல்

தூத்துக்குடி அருகே, குளத்தில் மூழ்கி வங்கி ஊழியர் உள்பட 2பேர் பரிதாப சாவு

Share

தூத்துக்குடி, மே.6-

தூத்துக்குடி அருகே குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி வங்கி ஊழியர்2பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி சின்ன கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி (25), இவர் ஐசிசி ஐ வங்கியில் கிளார்க்காகபணிபுரிந்து வந்தார். தூத்துக்குடிகீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் எசுவடியான் (25), மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவளை கிராமத்தில் மாரி செல்வம் என்பவர் வீட்டுக்கு சென்றனர் பின்பு நான்கு பேரும் மது அருந்திவிட்டு அங்கு உள்ள சுடலைமாடசாமி கோவில் படித்துறையில் குளிக்க சென்றனர் குடித்துக் கொண்டிருக்கும் போது . மலைச்சாமி, எசுவடியான் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்குள் சென்றதால் சகதியில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏரல் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று 2 பேர் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் மூழ்கி நண்பர்கள் 2பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.