LOADING

Type to search

இந்திய அரசியல்

ஹரியானா அரசுக்கு நெருக்கடி! நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு துஷ்யந்த் சௌதாலா கடிதம்!

Share

உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சௌதாலா கடிதம் எழுதியுள்ளார்.  

      பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கூட்டாளியான ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு கடிதம் எழுதி, மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியுள்ளார். முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் அங்கு அரசியல் நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில், துஷ்யந்த் சவுதாலா, அரசை கவிழ்க்கும் எந்த எதிர்க்கட்சிக்கும் தனக்கு முழு ஆதரவு உண்டு என்கிறார். ஜே.ஜே.பி தலைவர் தனது கடிதத்தில் பாஜக அரசுக்கு ஆதரவளிக்கவில்லை என்றும், ஆட்சி அமைக்க எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம், ஹரியானாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் ஆட்சி அமைப்பதற்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.