LOADING

Type to search

இந்திய அரசியல்

நாட்டிற்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்!

Share

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 2022ம் ஆண்டில், உலகிலேயே மிகவும் அதிகமாக சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. 

     ஐ.நா-வின் அங்கமான சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு 2000ம் ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அறிக்கையை வெளியிட்டு வருகிறது.  இதன்படி, 2022ம் ஆண்டுக்கான உலக புலம்பெயர்ந்தோர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, வெளிநாடுகளில் வசித்தும், பணியாற்றியும் வரும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு 2022-ஆம் ஆண்டு 111.22 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.9.28 லட்சம் கோடி) அனுப்பியுள்ளனர்.

அந்த வகையில், முதல் முறையாக, 100 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை அனுப்பி, அதிக பணம் அனுப்பிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் மெக்ஸிகோ 2-ஆவது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் மெக்ஸிகோ மக்கள் மூலம் அந்நாட்டுக்கு 2022-ஆம் ஆண்டு 61.10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக (சுமார் ரூ.5.10 லட்சம் கோடி) அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதில் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதன்படி,  வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள் மூலம் 2022-ஆம் ஆண்டு அந்நாட்டுக்கு 51 பில்லியன் டாலர் (ரூ.4.25 லட்சம் கோடி) கிடைத்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு 2010-ஆம் ஆண்டு 53.48 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4.46 லட்சம் கோடி) அனுப்பினர்.   இது 2015-ஆம் ஆண்டு 68.91 பில்லியன் டாலராகவும் (சுமார் ரூ.5.75 லட்சம் கோடி), 2020-ஆம் ஆண்டு 83.15 பில்லியன் டாலராகவும் (சுமார் ரூ.6.94 லட்சம் கோடி) அதிகரித்தது.