LOADING

Type to search

இலங்கை அரசியல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில்சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் பங்கேற்பு

Share

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு நேரம் வழங்குமாறு மன்னிப்புச் சபையின் கொழும்பு அலுவலகம் ஓரிரு மாதங்களுக்கு
முன்னரே ஜனாதிபதி செயலகத்திடம் கோரியிருக்கின்ற போதிலும், அதற்கு இன்னமும் உரிய பதில் வழங்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.

நடராசா லோகதயாளன்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் (அம்னெஸ்டி இண்டர்நேஷனல்) செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவு நிகழ்வில் பங்குகொள்ளவுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் இலங்கை வந்துள்ளதோடு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள மே 18 நினைவு தினத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.

ஒரு வார பயணமாக 15-05-2024 தினம் இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகிறது.

அந்த வகையில் யுத்த முடிவின் 15 வருடப் பூர்த்தியையொட்டி லண்டனைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் ந வியாழக்கிழமை இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.

முள்ளிவய்காலில் சில முக்கிய சந்திப்புக்களை நடாத்துவதற்கு உத்தேசித்திருக்கும் அக்னெஸ் கலமார்ட், எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர்களையும் சந்திக்கவுள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு நேரம் வழங்குமாறு மன்னிப்புச் சபையின் கொழும்பு அலுவலகம் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே ஜனாதிபதி செயலகத்திடம் கோரியிருக்கின்ற போதிலும், அதற்கு இன்னமும் உரிய பதில் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.