LOADING

Type to search

உலக அரசியல்

பிரபாகரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி; டென்மார்க்கில் நடத்த உள்ளதாக சகோதரர் தகவல்

Share

பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவருடைய  சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன், மனைவி மதிவதனி, பிள்ளைகள் மரணமடைந்து விட்டதாக பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர்  கூறியதாவது:-

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது.

பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம்.

பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது.

பிரபாகரன் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.