மன்னர் சார்லஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி!
Share
இங்கிலாந்தின் நாளிதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர் பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதி. கடந்த ஆண்டு 275-வது இடத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் படி, ரிஷி சுனக் 2022-23 இல் ஜிபிபி 2.2 மில்லியனை ஈட்டியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணம், அக்ஷதா மூர்த்தியின் தந்தை [நாராயண மூர்த்தி]-யின் ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸில் அக்ஷதா பங்கு வைத்திருப்பதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்போசிஸில் உள்ள பங்குகள் ஒரு வருடத்திற்குள் 108.8 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்துள்ளது. பிரிட்டன் இளவரசர் சார்லஸின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 600 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. இந்த ஆண்டு 610 மில்லியன் பவுண்டுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.