LOADING

Type to search

உலக அரசியல்

சீனாவுக்கு எதிரானவர்: தைவான் புதிய அதிபர் பதவி ஏற்பு

Share

கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான தைவானில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சி வெற்றி பெற்று லாங் சிங் டே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் அவர் கூட்டணி கட்சி ஆதரவுடன் தைவானின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் 8 நாட்டு தலைவர்கள், 51 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிறது. தங்கள் நாட்டை தனி நாடாக நிலை நிறுத்துவதில் தைவான் உறுதியாக உள்ளது.1996- ம் ஆண்டு முதல் தைவானில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள லாங் சிங் டே சீனாவுக்கு எதிரான கொள்கையினை கொண்டனர். இவர் அதிபரானது சீனாவுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. இவரை ஆபத்தான பிரிவினைவாதி என சீனா குற்றம் சாட்டி உள்ளது.