‘நாற்பதுக்கு நாற்பது மாயத்தால் நிகழ்ந்ததல்ல; நியாயத்தால் நிகழ்ந்தது’ கவிஞர் வைரமுத்து பாராட்டு
Share
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40க்கு 40 தொகுதிகளை வென்று எடுத்ததற்காக, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை, கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து பாராட்டினார். இதுபற்றி அவர் முகநூலில் பதிவிட்டு இருப்பதாவது:-
“நாற்பதுக்கு நாற்பது என்பது
மாயத்தால் நிகழ்ந்ததல்ல
நிர்வாகத் திறம் என்ற
நியாயத்தால் நிகழ்ந்தது
இந்த வெற்றி
உங்கள் ஆட்சியின்
மாட்சிக்குக் கிடைத்த சாட்சி
என்று சொல்லி
முதலமைச்சருக்குப்
பொன்னாடை பூட்டினேன்
பதற்றமில்லாமல்
வெற்றியின் பகட்டு இல்லாமல்
இயல்பான புன்னகையோடு இருந்தார்
வென்றார்க்கு அழகு
தோற்றாரை மதித்தல்
தோற்றார்க்கு அழகு
வென்றாரை வியத்தல்
பதவிக்கு அழகு
உதவிகள் தொடர்தல்
மக்களுக்கு அழகு
மறுவேலை பார்த்தல்.”
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.