LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து இரகசியமக நில அளவைப் பணிகள் முன்னெடுப்பு

Share

நடராசா லோகதயாளன்

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பிரதேசத்தில் எவருக்கும் தெரியாது இரகசியமாக நில அளவைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஜே/233 கிராம சேவகர் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான நிலம் மற்றும் சைவ அடையாளங்களை அபகரித்து மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இரகசியமாக ஓர் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை கோட்டபாய ராஜபக்சாவின் காலத்தில் நகர அபவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கடந்த ஆண்டு தனியார் பல்கலைக் கழகத்திற்கு 50 ஆண்டு குத்தகைக்கு ஒப்பந்தம் எழுதப்பட்டது.

இந்த நிலையில் தனியார் காணிகளை சுவீகரிப்பு செய்வதற்காக யாழ்ப்பாணம் நில அளவைத் திணைக்களம் 5 தடவை முயன்றபோதும் நில உரிமையாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகளினால் தொடரச்சியாக தடுக்கப்பட்டது. இதன் காரணமாக தம்மால் அளவீடு செய்ய முடியவில்லை என யாழ்ப்பாணம் நில அளவைத் திணைக்களம் நில அளவைத் திணைக்கள தலைமைப் பணிமனைக்கு அறிவித்துள்ளனர்.

இதன் அடப்படையில் கொழும்பு தலைமைப் பணிமனையில் இருந்து 2024-05-16 அன்று வருகை தந்த உத்தியோகத்தர்கள் கடற்படையினரின் பாதையின் ஊடாக உள்நுழைந்து அப் பிரதேசத்தை முழுமையாக அளவீடு செய்து பணிகளை நிறைவு செய்து அப் பகுதி கிராம சேவகர்களிடமும் ஒப்பம் பெற்றுச் சென்றுள்ளனர்.

இவை தொடர்பில் யாழ்ப்பாணம் நில அளவைத் திணைக்களத்தினரிடம் எந்தவொரு தகவலோ அல்லது அளவீட்டு வரை படமோ இல்லை எனவும் சுட்டக் காட்டப்படுகின்றது.