LOADING

Type to search

இந்திய அரசியல்

வாரிசு அரசியலைத்தான் பா.ஜ.க.எதிர்கிறது என்கிறார் வானதி சீனிவாசன்

Share

காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளின் வாரிசு அரசியலை பா.ஜ.க. எதிப்பதாக பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், தமிழக சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த செய்தி குறிப்பில் 1951 ஆம் ஆண்டு ஜன சங்கம் தொடங்கப்பட்டது முதல் 1980 ஆம் ஆண்டு அது பாஜகவாக தொடங்கி இன்று வரை, பாஜகவின் தலைவர் யார் என்பது? அவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை? யாருக்கும் தெரியாது. தேசிய தலைவராக இருந்தவர்களின் வாரிசுகள் யாரும் அந்த தலைவர் பதவிக்கு வந்ததில்லை. அடுத்த பாஜக தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் காங்கிரஸில் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு யார் தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் வாரிசு அரசியல்.

இதைத்தான் பாஜக எதிர்க்கிறது. 49 ஆண்டு காலம் திமுக என்ற கட்சியை தனது பிடிக்குள் வைத்திருந்த கருணாநிதி மறைந்ததும் அவரது மகன் மு.க ஸ்டாலின் இடம் அக்கட்சி சென்று விட்டது. மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சரத் பவர், உத்தவ் தாக்கரே என்று இண்டி கூட்டணியில் உள்ள பெரும்பான்மையான கட்சிகளை ஒரு குடும்பத்தினர் தான் கட்டுப்படுத்துகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி இருக்கிறதோ, இல்லையோ அவர்தான் அக்கட்சியின் அடுத்த தலைவராக முடிகிறது. இதுதான் வாரிசு அரசியல்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தற்போது மத்தியில் அமைந்துள்ள புதிய அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவர்களின் வாரிசுகள் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளதாகவும், இதுதான் வாரிசு அரசியல் என்றும், திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை பார்த்து வாரிசு அரசியல் என்று கூறும் பாஜக இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது என்ற கேள்வி எழுந்த நிலையில் வானதி சீனிவாசன் இந்த பதிலடியை கொடுத்துள்ளார்.