யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் இணைந்து ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி போராட்டம்
Share
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான கவனயீப்பு போராட்டம் 18-06-2024 அன்று முன்னெடுக்கப்பட்டது
வடக்கு மாகாண ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையம் முன்பாக அன்று காலை 10 மணி அளவில் பொது அமைப்புகள் சிவில் அமைப்புகள் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் சமய தலைவர்கள் என பலரையும் உள்ளடக்கிய கவனிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு 12. 15 மணியளவில் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதிபனின் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் ஊடக சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினரால் தாக்குதலை நடாத்தியவர்கள் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. எனவே குறித்த விடையம் தொடர்பில் நீதி கூறும் வகையிலான போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அதிகளவானோர் கலந்து கொண்டனர்.
இதன் போது போராட்டக்காரர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பதாகைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
குற்றவாளிகளைக் காப்பாற்றாமல்,
உண்மையை உலகறியச் செய்!, உண்மையை மறைக்கச்
சம்பவத்தைத் திசை திருப்பாதே!
மொட்டந் தலைக்கும்
முழங்காலுக்கும் ஏன் முடிச்சு!
குற்றத்தை நிரூபித்து; உண்மையை வெளிப்படுத்து!
ஊடகர் ஒற்றுமையை உலகறியச் செய்வோம்!
உண்மையைச் சொன்னால்,
வன்முறை தான் தீர்வா?
உள்ளிட்ட கோஷங்களை கொண்ட பதார்த்தங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இதன் போது ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் இலங்கையில் இடம் பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பிலே நீதி கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்திய அறிக்கையில் அனைவரின் கையெழுத்துக்களும் பெறப்பட்டு ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கும் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.