LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்” – ஆற்காடு சுரேஷின் தம்பி வாக்குமூலம்!

Share

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே ஆதரவாளர்களுடன் நின்ற போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை சூழ்ந்துள்ளது. இதையடுத்து, அந்த மர்ம கும்பலானது, ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது.. ”என் அண்ணன் ஆற்காடு சுரேஷை கொலை செய்தவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் அடைக்கலம் கொடுத்தார். எனவே எனது அண்ணன் கொலைக்கு பழிதீர்க்க ஓராண்டுக்குள் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினோம்“ ஆற்காடு சுரேஷ் தம்பி பாலு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.