உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பு!
Share
உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட நாள்தோறும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில், இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் சார்பில் கோடை சீசனுக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஊட்டி – மேட்டுப்பாளையம், ஊட்டி – கேத்தி இடையே கடந்த மார்ச் 29-ம் தேதியிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை ஜூலை 1 ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வரை நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், சிறப்பு ரயில்களின் சேவை ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.