LOADING

Type to search

உலக அரசியல்

நைஜீரியாவில் பள்ளிக்கூடம் இடிந்து விழுந்து விபத்து – 22 பேர் பலி

Share

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் பிலடியோ மாகாணம் பசா பிஜி கிராமத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. 2 அடுக்குமாடிகளை கொண்ட இந்த பள்ளிக்கூடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 120க்கும் மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கூடத்தில் நேற்று வழக்கம்போல் மாணவ-மாணவிகள் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளிக்கூடத்தில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இந்த விபத்தில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் 100க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டிருப்பதால் அவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியதாகவும் அவர்களில் 22 மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர் என்றும், 132 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று தகவல் ஆணையர் மூசா அஷோம்ஸ் தெரிவித்துள்ளார்.