LOADING

Type to search

கனடா அரசியல்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகத்தின் இயக்குனர் சபைக் கூட்டம் கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது

Share

50 ஆண்டுகளைக் கடந்து உலகெங்கும் இயங்கிவரும் தமிழ் அமைப்புக்களில் ‘எல்லைகளற்ற’ ஒரு அமைப்பாக வெற்றிகரமாக இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகத்தின் இயக்குனர் சபைக் கூட்டம் அண்மையில் கனடா ஸ்காபுறோ நகரில் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் கனடிய தேசத்தில் மத்தியி அரசின் கீழும் மாகாண அரசின் கீழும் சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பெற்று அதன் இலச்சனையும் (லோகோ) மத்திய அரசின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிட்த்தக்கது.

நீண்ட நாட்களின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற நடா இராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்குனர் சபைக் கூட்டத்தில் ஜேர்மனியிலிருந்து இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் : திரு. விசு துரைராஜா. (Canada

பொருளாளர் : திரு. மோகன் பாலசுப்ரமணியம். (Canada)

அகில முதன்மை துணைத்தலைவர் : திரு. சிவா கணபதி பிள்ளை. (Canada)

அகில ஊடகத்துறை

பொறுப்பாளர் : திரு. R.N.லோகேந்திரலிங்கம். (Canada)

தலைமை ஆலோகர் : பேராசிரியர், திரு.இ. நா. பாலசுந்தரம். (Canada)

துணைக் கிளைகள்

ஒருங்கிணைப்பாளர் : திரு. R. R. ராஜ்குமார். (Canada) ஆகியோரும் நேரடியாகக் கலந்து கொண்டனர்.

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் என்ற பெயரில் ஒரு சில நாடுகளில் இயங்கிவரும் சில குழுக்களை தொடர்புகொண்டு அகிலத்தலைமையகம் கனடா அனுமதியின்றி எமது பெயர், சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்க வேண்டுமெனவும், தேவை ஏற்படின் அவர்களோடு உரையாடுவதற்கும், மூன்று நபர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் பேராசிரியர், திரு. ஈ. நா. பாலசுந்தரம், திரு. சிவா கணபதி பிள்ளை, திரு. R.N.லோகேந்திரலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இயக்கத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் கனடாவில் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கு முயற்சி எடுக்கலாம் எனவும் அதனைத் தொடர்ந்து இலங்கையில் பொன் விழாவையும் மாநாட்டை நடத்தலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.